Sunday 22 March 2015

அபிராமி ஓர் ஆச்சரியம் - பகுதி 6

                           குடும்பத்தில் புதுப் பெண்
நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தபோது என் அறை கதவை தட்டும் சத்தம் கேட்டது. அதற்குள் காலை ஆகிவிட்டது போல். நான் உடனே சென்று கதவை திறக்கலாம் என்று செல்லும் போதுதான் தெரிந்தது நான் என் தங்கச்சி உடை அணிந்திருக்கிறேன் என்று."கதவை திறடா ஆனந்த். இன்னக்கி எனக்கு மேட்ச் இறுதி போட்டி இருக்கு. சீக்கிரம் குளிச்சிட்டு கிளம்பனும்" என் தங்கை கத்திக் கொண்டிருந்தாள்.நான் என்ன செய்வது என்று தெரியாமல் அவசரம் அவசரமாய் ஆடைகளை கலைந்தேன். மேலாடையை கழற்றிவிட்டேன். ஆனால் என் உள்ளாடைகளை கழற்ற முடியவில்ல. பிரா ஹூக் கழட்ட ரொம்ப கஷ்டப்பட்டும் முடியவில்லை. அதற்குள் கீதா கதவை வேகமாக தட்ட ஆரம்பித்தாள்."இன்னுமா தூங்குற.. எழுந்திரிடா. கதவை திற. நான் குளிக்கணும்" என்றாள்.நான் இப்போது பிரா மற்றும் பேன்ட்டி போட்டுக்கொண்டு நின்று இருந்தேன். பிராவினுள் வைத்திருந்த துணிகளை எதுத்து விட்டேன். அடுத்து எனக்கு என்ன பண்றதுன்னு புரியவில்லை. அவரசரமாக என்னுடைய ஆண் டி-ஷிர்ட் மற்றும் ஷாட்ஸ் போட்டுக்கொண்டேன்.பின்பு மெதுவாய் கதவைத் திறந்தேன். உள்ளிருந்த படியாய் என்னவென்று கேட்டேன். அவள் கதவைதள்ளிக்கொண்டு;உள்ளே வந்தாள்.அப்போதுதான் என்னோட பிராவும் பேண்டியும் ஆடைகளில் இருந்து வெளியே தெரிகிறது என்று உணர்ந்தேன். இப்போது நான் அதை அட்ஜஸ்ட் பண்ணக்கூட முடியாது . முயற்சித்தால் மாட்டிக்கொள்வேன் என்று தெரியும். அவள் பார்த்து விடக்கூடாது என்று கடவுளை வேண்டினேன்."டேய் , என்னடா இது?" என்று  கத்தினாள்.அய்யயோ, பார்த்துவிட்டாள் என்று தெரிந்தது. இருந்தாலும் சமாளிக்க  முயிர்ச்சிதேன்."என்னடி, என்ன ஆச்சு?""என்ன போட்டிருக்க உன் டி-ஷிர்ட் உள்ளே?""ஒன்னும்  இல்லே""இல்ல இல்ல நான் பார்த்தேன்" என்று பத்ரூம்குள் சென்று பார்த்தாள். அங்கே அவள் மேலாடை மட்டும்தான் இருந்தது. உள்ளாடைகளை காணவில்லை.நான்  மறைத்தாலும் அவள் விடுவதாய்  இல்லை."ஏன் நீ என்னோடதை போட்டிருக்கிற?, சொல்றியா இல்லை  அம்மாவை கூப்பிடவா?""அது எல்லாம் எதுவும் இல்லை""இல்லை . நான் நிச்சியமாய் பார்த்தேன்""என்ன பார்த்த? இங்க  பாரு , என்கிட்டே எதுவும் இல்லை" என்று  என் கையை காட்டினேன்."பொய்  சொல்லாதடா. என்னால உன்கிட்ட அதை சொல்ல  வெட்கமா இருக்கு. இரு அம்மாவை கூப்பிடுறேன். அம்மா, இங்க  வாயேன்" என்று கத்தினாள் ."இரு இரு , அம்மாவை  கூப்பிடாத. நானே சொல்லிடுறேன்" என்றேன்."அப்போ  ஒத்துக்குறதானே?""ஆமா""சரி.. எனக்கு இப்போ நேரமாச்சு.. நான் விளையாடிட்டு வரேன். சாயந்திரம் பேசலாம்."அவள் குளித்துவிட்டு சென்றுவிட்டாள். அவள்  என் முன்னே வரும் போதெல்லாம் என்னை வெட்கம் பிடுங்கித்தின்றது. உள்ளாடைகளை இப்போது களைந்துவிட்டு கட்டிலில் அமர்ந்தேன். என்னை அறியாமல் நான் அழத் தொடங்கிவிட்டேன். நான் நாள்முழுவதும் அழுது கொண்டு இருந்தேன். நான் வெளியே வராததைகண்டு அம்மா என் அறைக்கு வந்தார். உடம்பு சரி இல்லாததால் இன்று அவர் லீவ்."ஏன்டாகாலைல இருந்து உள்ளே இருக்க.. என்ன ஆச்சு? உனக்கும் உடம்பு சரி இல்லையா?""ஒன்னும் இல்ல.""என்னடா அழுதியா என்ன? என்ன காரணம்?""அதான் ஒன்னும் இல்லன்னு சொல்றேன்ல. நீ போ""சரி சரி, கொஞ்சம் தூங்கி ரெஸ்ட் எடு. எல்லாம் சரியாகிடும்" என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அவர் சென்ற பின்னும் என் அழுகை நிக்கவில்லை.நான் அவள் வீட்டுக்கு வராததால், பூர்ணிமா என்னைத்தேடி என் அறைக்கு வந்துவிட்டாள்."என்னடி அபிராமி அழுவுற? உன் பாய் பிரண்டு முத்தம் கொடுத்துதானா?" என்று விஷயம் தெரியாமல் கிண்டலடித்தாள். அதனால் இன்னும் அதிகமா அழ ஆரம்பித்தேன்.நான் அவளிடம் நடந்ததை சொன்னேன். அவள் எனக்கு சமாதானம் சொன்னாள். ஆனால் என்னால் அதை ஏற்க முடியவில்லை."இது எப்படியும் ஒருநாள் கண்டிப்பா தெரியப் போகுதுடி. அது இப்போ தெரிஞ்சா என்ன? நமக்குதான நல்லது?""கீதா என்னை ஒரு மாதிரி கேவலமா பாத்தா. எனக்கு ஒரு மாதிரி இருந்தது""முதல் தடவை பாக்குறா.. அதான் அப்படி. நான் பேசுறேன் அவகிட்டையும் அம்மாகிட்டயும்.""ஒத்துப்பாங்களா என்னை ஒரு பொண்ணா?""கண்டிப்பா. நீ கவலைப்படாத. நான் கீதா வரும்வரை வெயிட் பண்ணுறேன்" என்று என்னருகில் அமர்ந்தாள். நாங்கள் இருவரும் காத்திருந்தோம் கீதாவின் வருகைக்காக. என் மனதுக்குள் ஒவ்வொரு நிமிடமும் ஒரு வருடம் போல் தோன்றியது.கீதா இரவு 7 மணிக்குவீட்டுக்கு வந்தாள். நான் அறையைவிட்டு வெளியே வரவில்லை என்பதை அம்மவிடம் இருந்து தெரிந்து கொண்டாள். கீழ் அறையில் தண்ணீர் வரவில்லை என்பதால் இப்போதும் என் அறைக்கு அவள் குளிக்கவந்தாள். அழுகை முகத்துடன் என்னைப் பார்த்தாள். பின்பு பூர்ணிமாவை பார்த்து சிரித்துவிட்டு பத்ரூம்குள் சென்றாள். அவள் குளித்துவிட்டு வரும்போது சாட்டின்(satin) நைட்டி அணிந்திருந்தாள். இன்று நடந்த விளையாட்டு போட்டியில் வென்றுவிட்டதாக சந்தோசமா சொன்னாள்."கீதா, நான் சொல்லுறதைக் கேளு" பூர்ணிமா ஆரம்பித்தாள்."சொல்லுடி பூரணி""அபிராமி இன்னக்கி நடந்ததை சொன்னாள். ஒரே அழுகை""யாரு அபிராமி?" என்று புரியாமல் கேட்டாள்."இதோ. இவள்தான் அபியாமி" என்று என்னைக் காட்டினாள்."என்ன சொல்ற? இது என்னோட அண்ணன்?""நான் உனக்கு எல்லாத்தையும் சொல்றேன்" என்று எல்லாவற்றையும் விளக்கினாள்."இல்ல இல்ல என்னால இதையெல்லாம் ஒத்துக்க முடியாது. அவன் வாழ்க்கை என்ன ஆவது? பொண்ணு மாதரி காலேஜ் படிச்சா ஆண் மாதிரி அவன் வேளைக்கு போகமுடியாது.""அது எல்லாம் ஒன்னும் கஷ்டம் இல்ல. எங்க அம்மா கலெக்டர் தான. ஈசியா எல்லா செர்டிபிக்கேட் வாங்கிடலாம்."அவள் சிறிது நேரம் யோசித்தாள்."இதுதான் அவனுக்கு சந்தோசம்னா எனக்கும் ஓகே தான். நானே அம்மாகிட்ட பேசி சம்மதம் வாங்குறேன்" என்றாள்.பின்பு, கீதாவும், பூர்ணிமாவும் சென்று அம்மாவிடம் பேசினார்கள். அம்மா அதிர்ச்சி அடைந்தார்கள்.பின்பு அவர் தெளிவாக பேசினார்கள்."எனக்கு கொஞ்சம் கஷ்டமாவும் இருக்கு, கொஞ்சம் சந்தோசமாவும் இருக்கு. ரொம்ப வருஷம் தவம் இருந்து பெத்தபையன் இவன். இவன ஒரு பொண்ணா பார்க்க என் மனசு வலிக்குது.ஆனா அவன் பூர்ணிமா என்ற பிரண்டுக்காக இவ்ளோ தியாகம் பண்றான்னு நினைக்கும்போது எனக்கு பெருமையா இருக்கு. ஒரு பெண்ணுக்காக அவனே ஒரு பெண் மாதிரி இருக்கணும்னு நினைக்குறான்.அதுதான் அவனுக்கு விருப்பம் என்றாள் எனக்கும் சம்மதம்தான். என்னோட இறந்துபோன இரண்டாவது குழந்தை அபிராமி தான் இப்போ இங்க இருக்குறதா நான் நினைச்சிகுறேன்" என்று சொன்னபோது அவரின் கண்கள் கலங்கி இருந்தது."அதனால்தான் அபிராமி என்ற பெயர் வச்சிக்கிட்டா அவ. என்கிட்டே முன்னாடியே சொல்லிருக்கா" என்று பூர்ணிமா சொன்ன போது அம்மா என்னை ஓடி வந்து கட்டிப்பிடித்தாள். நான்மிக அதிகமா அழத் தொடங்கி விட்டேன்.கட்டுப்படுத்த முடியாமல் தேம்பி தேம்பி அழுது கொண்டு இருந்தேன்."இங்க பாருங்கடி, எப்படி அழுறா என்று. ஒரு வயசுப்பொண்ணு அழுகுற மாதிர அப்படியே அழுகிறாள்" என்ற சிரிப்போடு சொன்னார் அம்மா."சீ, போங்கமா" என்று நான் வெட்கத்துடன் சொன்னேன்.உடனே அங்கே இருந்து 3 பெண்களும் வாய்விட்டுச் சிரித்தனர். பின்பு நாங்கள் எல்லோரும் சாப்பிட வரும்மாறு அம்மா கூப்பிட்டாள். பூர்ணிமாவும் எங்களோடு வந்தமர்ந்தாள். அப்போது அம்மா பேசத் தொடங்கினார்."இன்றில் இருந்து எனக்கு 2 பொண்ணுங்க. மூத்தவ அபிராமி. சின்னவ கீதா. எனக்கு இப்போ பொறுப்பு அதிகமாயிடிச்சி.கீதா, இனிமேல் அவள அக்கா என்றுதான் கூப்பிடனும். முன்னமாதிரி அவன், இவன் என்று மரியாதை இல்லாமல் பேசக்கூடாது. அபிராமிதான் எனக்கு இனி செல்ல பொண்ணு" என்றபோது கீதா பொய்யாய் கோபித்துக் கொண்டாள். பின்பு அம்மாவே பேசத் தொண்டங்கினார்."அபிராமி, இனிமேல் நீ கீதா ட்ரெஸ் போடணும்னு அவசியம் இல்ல. உனக்கு புது டிரஸ் வாங்கலாம். ஆனால் +2 பரீட்சை முடியும்வரை நீ வீட்டுக்குள் மட்டும்தான் உடை அணியவேண்டும். அதுக்கு அப்புறம் நீ வெளியே பெண் போல் செல்லலாம். உனது பள்ளியில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது, அதனால்தான் சொல்றேன்.""சரிமா.. நான் இப்போ நல்ல பொண்ணு. நீங்க சொல்றத கண்டிப்பா கேட்பேன்" என்றேன். நேரம் ஆனதால் பூரணி அவள் வீட்டுக்கு சென்று விட்டாள்.நான் என் அறைக்கு சென்றபின் கீதாவும் என் பின்னே வந்தாள்."அக்கா, ரொம்ப சாரி. காலைல இருந்து உன்னை ரொம்ப அழ வச்சிட்டேன். எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு இப்போ. எனக்கு ஒரு அக்கா கிடைசிச்டாங்க.""எனக்கும் ரொம்ப சந்தோஷம்""அக்கா,  உங்களுக்கு வேணும்னா என்னோட டிரஸ் எடுத்து போட்டுக்கலாம். ஆனால் என்னோட பிரா, பேன்ட்டி மட்டும் போடக்கூடாது. பொண்ணுங்க உள்ளாடைகளை ஷேர் பண்றது நல்லது இல்ல. அதான் சொல்றேன்""புரியுதுடி கீதா"."ஆனா இன்னும் சிலநாள் மட்டும் என்னோட உள்ளாடைகளை போட்டுக்கலாம். உங்களுக்கு புதுசு வாங்கும் வரை. இன்னக்கி நைட் என்னோட இந்த நைட்டி போட்டுக்கோங்க" என்று நைட்டி மற்றும் உள்ளாடைகளை வைத்துவிட்டு சென்றாள். நாங்கள் எல்லோரும் மிகவும் உணர்ச்சிவயப்பட்டதால் அதிகமாய் யாரும் பேசிக் கொள்ளவில்லை.எனக்கு இன்று தான் வாழ்வின் மிக முக்கியமான நாள். வாழ்கையில் இதுவரை இவ்வளவு சந்தோசமா தூங்க சென்றது இல்லை.

No comments:

Post a Comment