Wednesday 18 March 2015

அபிராமி ஓர் ஆச்சரியம் - பகுதி 1

ஆனந்தின் வாழ்க்கை
இதோ மணி காலை 10 ஆகி விட்டது. இன்னும் நான் என் படுக்கையில்தான் இருக்கிறேன். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் எனது அம்மா வனிதாவும் , தங்கை கீதாவும் வீட்டில் இருந்தனர். நாளை பொங்கல் விடுமுறை வேறு.
"டேய் ஆனந்த், நேரமாகுது.. சீக்கிரம் வந்து சாப்பிடு", அம்மாவின் அழைப்பு என் காதில் அரைகுறையாக விழுந்தது.

காலை கடன்களை முடித்துவிட்டு, கீழே இறங்கி வந்தேன். வழக்கம்போல் அம்மாவும் தங்கச்சியும் ஒரே மாதிரி நைட்டி அணிந்து இருந்தார்கள்.இரவு முழுவதும் மற்றும் கிரிக்கெட் பார்த்தால் நன்றாக தூங்கிய பிறகும் எனக்கு மிகவும் சோர்வாக இருந்தது, அனால் என் தங்கை கீதா மட்டும் அவளது பள்ளி பாடங்களை படித்துக் கொண்டு இருந்தாள்.
 
அவள் என்னை விட இரண்டு வயது சிறியவள். எனக்கும் அவளுக்கும் எப்போதும் சண்டைதான். நாங்கள் இருவரும் ஒரே பள்ளி. நான் ரெண்டுதடவை பெயில் ஆனதால் நாங்க இருவரும் இப்போது ஒரே வகுப்பில் உள்ளோம். கீதா படிப்பிலும் விளையாட்டிலும் ரொம்ப சுட்டி. அவள்தான் எங்கள் பள்ளி த்ரோ பால் பெண்கள் அணியின் கேப்டன். நான் அவளுக்கு நேர் எதிர். நான் எதிலும் ஆர்வம் காட்டியது இல்ல. எனக்கு மெல்லிய தேகமும் குழந்தை முகமும், என் வயது பசங்களிடம் இருந்து என்னை பிரித்து காட்டும் . 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு என்பதால் அவள் மிக சிரத்தையாக படித்தாள். எனக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரம்.
நான் எப்போதும் படிக்காமல் நண்பர்களுடன் ஊர் சுற்றுவதால் அம்மாவுக்கு என் மேல் வருத்தம். அம்மா ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். அப்பா எப்போதோ இறந்து விட்டார். அம்மா தான் எந்த குறையும் இல்லாமல் எங்களை நன்றாக வளர்த்தார்கள். அதனால் அம்மா மீது எங்கள் இருவருக்கும் அதிக அன்பு.
"பாரு டா.. கீதா எப்படி படிக்குறா.. நீயும் கொஞ்ச நேரம் படிக்ககூடாதா?", அம்மா புலம்பினாள்.

"இன்னைக்கு லீவ் தான.. நாளைக்கு படிக்கலாம்", என்று சொல்லிவிட்டு கை கழுவ எழுந்தேன். அனால் எங்கள் வீட்டு வேலைகாரி இன்னும் கொஞ்சம் அதிகம் சாப்பிடவேண்டும் என்று கட்டாயபடுத்தினார். வேலைக்காரி தான் என்றாலும் செல்வி எங்கள் வீட்டில் ஒரு அங்கம். செல்வி அக்காவுக்கு சாந்தி என்ற 7ஆம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கிறாள். செல்வியின் படிப்புச் செலவை அம்மா தன பாத்துக் கொள்கிறார்.

சிறிது நேரம் கழித்து நான் வெளியே செல்ல கிளம்பி கொண்டு இருந்தேன். கீதா இப்போது த்ரோ பால் பயிற்சிக்காக sports tops மற்றும் shorts அணிந்துகொண்டு  கையில் பந்துடன் அறையில் இருந்து வெளி வந்தாள்.
அப்போது வழக்கம்போல அம்மாவின் கேள்வி வந்தது.
"எங்கடா போற இப்போ?"
"அவன் எங்க போவான்..பூர்ணிமா வீட்டுக்கு தான்." என்று எனக்கு பதிலாக அம்மாவிடம் சொன்னாள் கீதா. இப்படித்தான் அவள் என்னை வாடா போடா அவன் இவன் என்று மரியாதை இல்லாமல் பேசுவாள். முதலில் கோபம் வந்தாலும் இப்போது அது பழகி போனது.

கீதா சொன்னதுபோல் நான் இப்போது பூர்ணிமா வீட்டுக்கு தான் போய்க்கொண்டு இருக்கிறேன். என்னோட வீட்டில் இருந்து 2 வீடு தள்ளி இருக்கிறது அவள் வீடு. நானும் அவளும் 10 வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். அவளது அப்பா வெளிஊரில் ஒரு பள்ளி ஆசிரியர் என் அம்மா போலவே. அவளது அம்மா இந்த மாவட்ட கலெக்டர். கொஞ்சம் மாசத்துக்கு முன்னாடி தான் இந்த மாவட்டத்துக்கு மாற்றல் ஆகி வந்தார்கள். அதிக நேரம் பூரணி வீட்டில் தனியாகத்தான் இருப்பாள். நானும் அவளோடு சேர்த்து கொள்வேன்.

அவள் வீட்டுக்குளே போனதும் அவளோட அம்மா அப்பா சோபாவில் உட்கார்ந்து டி.வீ ; பார்த்து கொண்டு இருந்தனர். பூரணி அம்மாவும் என் அம்மாவும் மிக நெருங்கிய தோழிகள்.
"வா டா ஆனந்த்", அன்பாய் அழைத்தார் பூரணி அப்பா.
"சாப்பிட்டியா டா ? என்று கேட்ட அம்மா, நான் பதில் சொல்லும்முன் "பூரணி உள்ளே கிட்சென்ல இருக்கா" என்று சொல்லி முடித்தார்.
"சரிமா" - என்று சொல்லி சமையல் அறை பக்கம் போனேன்.
சமையல் அறையில் பூர்ணிமா பாத்திரம் கழுவிக்கொண்டிருந்தாள். அவள் satin நைட்டி அணிந்திருந்தாள். அவளுக்கு என்னை போன்றே உயரமும் உடல் அமைப்பும். எங்களுக்குள் ஒரே வித்தியாசம் அவள் ஒரு பெண்.. நான் ஒரு ஆண். அனால் நாங்கள் அந்த வித்தியாசம் கூட இல்லாமல் தான் பழகினோம்.
 
"என்னடீ, இன்னக்கி கூட நீ வீடு வேலை செய்யிற? உனக்கு லீவே இல்லையா?"
"உனக்கு என்ன ஆனந்த்... நீ ஆம்பிள. உன்ன யாரும் எதுவும் செய்ய சொல்லமாட்டாங்க. நான் அப்படியா? எங்கம்மா கலெக்டர் தான்.. but எல்லா பொண்ணுங்களும் வீட்டு வேலை செய்ய கத்துக்கணும்னு அடிக்கடி சொல்வாங்க."
"என்னமோ போ..இதுல்லாம் லேடீஸ் மேட்டர். எனக்கு ஒன்னும் புரியல. அதுசரி... ஏன்டி நீயும் எப்பவுமே வீட்டுல நைட்டி போடுற?"
"நீயும் நா? வேற யார சொல்ற?"
"என் அம்மா, என் தங்கச்சி, உன்னோட அம்மா"
"ஹ்ம்ம்..இதுவும் பொம்பளைங்க விஷயம் தான்.. உனக்கு எல்லாம் புரியாது" - இப்படியாக வெட்டிப் பேச்சு பேசி முடிக்கவும் அவள் வேலை செய்து முடிக்கவும் சரியாக இருந்தது.
பாத்திரங்களை அடுக்கி வைக்கும் வரை காத்திருந்துவிட்டு, நானும் அவளும், அவளுடைய அறைக்கு சென்றோம். பூரணி மற்றும் எனது பெற்றோர்கள் எங்கள் நட்பை என்றும் தவறாக நினைத்தது இல்லை.
அவளது அறை எனக்கு சுத்தமாக புடிக்காது. எல்லாமே பிங்க் நிறத்தில் இருக்கும். இதை பற்றி போன முறை கேட்டபோது நான் ஒரு பெண்ணாக இருந்தாதான் இதுஎல்லாம் ஏன் என்று புரியும்னு சொன்னாள்.
 
அவ எல்லாத்துக்கும் இதையே காரணமா சொல்றா. நான் அவகிட்டயே இதை கேட்கனும்னுதோணிச்சி.
"ஏன்டி நான் எதை கேட்டாலும் இது எல்லாம் பொம்பளைங்க சமச்சரம்னு சொல்ற? ஏன், பசங்களுக்கு இது எல்லாம் புரியாதா?"
"அது அப்படி இல்லைடா...ஒரு பொண்ணுக்கு தான் சில விஷயங்கள் புரியும், புடிக்கும். என்னோட பாட்டி சொல்லுவாங்க - ஒரு பொட்டச்சி மனசு ரொம்ப பெரிய புதிர் மாதிரினு." - விளக்கம் சொன்னாள் அவள்.
"அது என்ன பொண்ணுங்களுக்கு மட்டும் புரியுற விஷயம்?"
"டேய்.. சொல்லனும்னா நிறைய சொல்லலாம்."
"எங்க,சும்மா 2 இல்ல 3 சொல்லு பாக்கலாம்"
"அது எல்லாம் சொன்னா புரியாது டா..ஒரு பொண்ணா இருந்து அனுபவிச்சா தான் அது எல்லாம் புரியும்".
"அப்படினா எனக்கு ஒன்னும் புரிய தேவை இல்லை." - என்றேன் நான்.
"சரி விடு..hey, இன்னைக்கு எங்க வீட்டுக்கு என்னோட அத்தையும் மாமாவும் வராங்க. so நாங்க இப்போ குடும்பத்தோட ஏர்போர்ட் போய் அவங்களை கூப்பிட்டு வரபோறோம். நாளைக்கு நீ மறக்காம சாயந்திரம் வா." என்று சொன்னாள்.
நான் நாளை வரை காத்திருக்க வேண்டும் மீண்டும் அவளுடம் பேச. என்ன பண்ண.. எனக்கு இருக்கும் ஒரே நட்பு அவள்தானே.

No comments:

Post a Comment