என்னை கிரண் அவன் காரில் முன்னாடி அவன் பக்கத்தில் உட்கார வைத்து திவ்யாவை பின்னாடி உட்கார சொல்லி அவன் வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு மாமி அதாவது என் வருங்கால மாமியார் எங்கள் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தார். அவர் பெயர் கஜ லக்ஷ்மி. என்னை பார்த்து வாமா இளமதி என்று கைகளைப் பிடித்து அழைத்துச் சென்றார். பின்னர் எனக்கும் கிரணுக்கும் திவ்யாவுக்கும் காபி போட்டு கிரண் அம்மா கொண்டு வந்தார். சிறிது நேரம் கழித்து கிரண் தங்கை வீட்டிற்குள் நுழைந்தால். அவள் பெயர் ஷாமிலி. பின்னர் அவள் வந்ததும் அவள் அம்மாவிடம் "யாருமா? திவ்யா அக்கா கூட வந்துருகாங்க, அவங்க ப்ரண்ட்டா" என்று கேட்டாள். அதற்கு அவங்க "ஆமாடி திவ்யாவோட ப்ரண்ட்தான் அவங்க பேரு இளமதி, ஆனா இப்ப அவங்க உனக்கு அண்ணி ஆயுதாங்க இனிமேல அவங்கள நீ அண்ணிணுதான் கூப்பிடனும்" என்றார். பின்னர் என்னிடம் வந்து ஷாமிலி "அண்ணி நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க" என்று கூறினாள். பின்னர் வாங்க அண்ணி என்று என்னை அன்பாக அழைத்து அவள் வீடு முழுவதும் கூட்டி சுற்றி காண்பித்தால். பின்னர் அவங்களோட family ஆல்பம் அனைத்தையும் காண்பித்தால். அதை...