Skip to main content

Posts

Showing posts from January, 2021

நர்சிங் காலேஜ் - 13

  முதல் நாள் கல்லூரி சீக்கிரமே முடிந்து விட்டதால் வீட்டிற்கு வந்து விட்டேன். அம்மாவும் ரம்யாவும் வருவதற்கு நேரம் ஆகும். வெயிலில் வந்ததால் வியர்வையாக இருந்தது. புடவையை அவிழ்த்து விட்டு குளிக்கலாம் போல இருந்தது. நன்றாக குளித்து விட்டு வந்தேன். வேறு ஒரு காட்டன் புடவை கட்டலாம் என நினைத்தேன். உள்பாவாடை மற்றும் பிரா அணிந்தேன். பின்னர் வேறு ஒரு எண்ணம் தோன்றியது. shorts போட்டு ரொம்ப நாள் ஆச்சு, shorts போட்டுக்கலாம் என தோன்றியது. உள்பாவாடையை கழற்றி விட்டு shorts அணிந்தேன். பின்னர் ஒரு T-Shirt எடுத்து பிரா மேலேயே அணிந்து கொண்டேன். ஏனோ பிராவை கழற்ற வேண்டும் என தோன்றவில்லை. பின்னர் நன்றாக தூங்கி எழுந்தேன். மாலை மணி 5 ஆகிவிட்டது. இன்னும் அம்மாவும் தங்கையும் வரவில்லை. போர் அடித்தது. மஞ்சள் தேய்த்து முகம் கழுவி விட்டு கொஞ்சம் மேக்கப் போட்டு கொண்டேன். T-Shirt போட்டிருந்தாலும் பெண் போலவே இருந்தேன். கண்ணாடி முன் பார்த்து கொண்டிருக்கும் போதே ரம்யா வந்து விட்டாள். "என்ன அண்ணா! முதல் நாள் காலேஜ் எப்படி இருந்தது." "நான் நினைத்த அளவுக்கு மோசமாக இல்லை. யாரும் அவ்வளவா கிண்டல் பண்ணவில்லை" ...

நர்சிங் காலேஜ் - 12

  அம்மா என்னை கல்லூரி வாசலில் இறக்கிவிட்டு சென்றுவிட்டார்கள். ஒரு வாரம் முழுவதும் புடவை கட்டி பழகி இருந்தாலும், இன்று ஏனோ புடவை கட்டி கல்லூரியில் நுழையும் போது கால்கள் நடுங்கின. கல்லூரி மிகப் பெரிதாக பரந்து விரிந்து இருந்தது. ஏராளமான மரங்கள் இருந்தன. பொண்ணுங்க எல்லோரும் ஒரு ஆல  மரத்தடியில் நின்று  பேசிக்கொண்டிருந்தார்கள். நிறைய பேருக்கு ஏற்கெனவே friends இருந்தார்கள். நான் ஊருக்கு புதிது என்பதால் எனக்கு யாரையும் தெரியவில்லை. நானாக சென்று பேச்சை துவக்க தயக்கமாக இருந்தது. நான் பெண் அல்ல, ஆண் தான் என்பதை கண்டுபிடித்து விட்டார்களா என பயமாக இருந்தது. பின்னர், எப்படியும் தெரிந்துதானே ஆக வேண்டும் என என் மனதை தேற்றி கொண்டேன். இது வரை யாரும் என்னை வித்தியாசமாக பார்க்கவில்லை. எல்லோரும் என்னை பெண் என நினைத்து கொண்டார்கள் போல. நான் யாருடனாவது பேச ஆரம்பிக்கலாம் என யோசித்துகொண்டிருக்கும் போதே பிரின்சிபால் மூன்று ஆசிரியைகளுடன் வந்தார். எங்களுக்கு கல்லூரி விதிகளையும் மற்ற விவரங்களையும் கூறினார். பேச்சின் போதே அவர் என்னை தேடுவது போல  தோன்றியது. நான் பின்னால் நின்று கொண்...

நர்சிங் காலேஜ் - 11

  மறுநாள் காலை ரம்யா காலேஜ் சென்றுவிட்டாள். அம்மா ஆபீஸ் போய் விட்டார்கள். நான் மட்டும்தான் தனியாக இருந்தேன். அவர்கள் இருவரும் சென்ற பிறகு நான் குளித்து புடவை கட்டி ரெடி ஆகி விட்டேன். அம்மா லஞ்ச் செய்து வைத்து விட்டார்கள். வேறு ஏதும் வேலை இல்லை. திரும்ப திரும்ப கண்ணாடியை பார்த்து கொள்வதும் மேக்கப் சரி செய்வதுமாக இருந்தேன். ரம்யா இல்லாமல் போர் அடித்தது. முதல் நாள் என்பதால் சீக்கிரமே காலேஜ் விட்டு விட்டார்கள் போல. நான் மதியம் சாப்பிட்டுவிட்டு டிவி பார்த்துக் கொண்டிருந்தேன். ரம்யா வந்து விட்டாள். "ரம்யா, நீ இல்லாம இன்னைக்கு ரொம்ப போர் அடிச்சிருச்சு." - என்றேன். "இன்னும் ரெண்டு நாள் தான்..அப்புறம் உனக்கும் காலேஜ் திறந்துடுவாங்க." "அதை நினைத்தால்தான் பயமா இருக்கு. எப்படி சமாளிக்க போறேன்னு தெரியல.." "நீ வருத்தபட அவசியமே இல்லைண்ணா.. ஒரு வாரத்துக்குதான புடவை கட்ட வேண்டியிருக்கும்னு சொன்னாங்க. இல்லன்னாலும் நீ புடவை கட்டிட்டு போனா உனக்கும் மத்த பொண்ணுங்களுக்கும் ஒரு வித்தியாமும் இருக்காது." "நான் மட்டும் தான் அங்க ஒரே பையன். எல்லா பொண்ணுங்களும் என்ன கி...

நர்சிங் காலேஜ் - 10

  ரம்யா என்னை மிகவும் அழகாக்கியிருந்தாள். எனக்கே என்னை பார்த்து கொண்டே இருக்க வேண்டும் என தோன்றியது. அன்று முழுவதும் அடிக்கடி கண்ணாடி முன் நின்று பார்த்து கொண்டிருந்தேன். இப்போது புடவையை handle செய்யும் விதம் அனிச்சையாக  எனக்கு வந்திருந்தது.. என்னை அறியாமலேயே மார்பின் மேல் உள்ள புடவை தலைப்பை அவ்வப்போது இழுத்துவிட்டு கொண்டேன். படிகளில் ஏறி இறங்கும் போது கொசுவத்தை தூக்கி பிடித்துக் கொண்டேன். இடுப்பில் உள்ள மடிப்பு கீழே இறங்கும் போது மேலே இழுத்து விட்டேன். முந்தானையை இழுத்து சொருகுவது, பின்னால் free ஆக விடுவது, மார்பின் மேல் மடிப்புகள் இல்லாமல் plain ஆக போர்த்துவது, என டிவி யில் பெண்களை பார்த்து அனைத்தையும் முயற்சி செய்தேன். மேக்கப் என்னுடைய மன பலத்தை கூட்டியிருந்தது. நாமும் அழகாகத்தான் இருக்கிறோம், ஏன் டிவியில் வரும் மற்ற பெண்கள் செய்வதை செய்து பார்க்க கூடாது என தோன்றியது. முக்கியமாக மெகா சீரியல் ஹீரோயின் மற்றும் செய்தி வாசிக்கும் பெண்களை கவனிக்க ஆரம்பித்தேன். அவர்களை போல என்னுடைய புடவையையும் அணிவதற்கு முயற்சி செய்தேன். அம்மா இரவில் வரும்போது எல்லா ஜாக்கெட்டுகளையும் alter ச...

நர்சிங் காலேஜ் - 9

  மூன்று பெரும் சாப்பிட்டு முடித்துவிட்டு என்னுடைய புடவை ஜாக்கெட்டுகளை try செய்தோம். uniform ஜாக்கெட் அனைத்தையும் போட்டு பார்த்தேன். எல்லா அளவுகளும் சரியாக இருப்பதாக அம்மாவும் தங்கையும் சொன்னார்கள். மற்ற ஜாக்கெட் அனைத்தும் ரெடிமேட் ஆக எடுத்திருந்ததால் சில திருத்தங்கள் செய்ய வேண்டி இருந்தது. அம்மா அவற்றை குறித்து கொண்டார்கள். நாளை alter செய்து வாங்கி வந்து விடுவார்கள். மிகவும் கச்சிதமாக இருந்த ஒரு ரெடிமேட் ஜாக்கெட்டை கொடுத்து, நாளை இந்த ஜாக்கெட்டை போட்டுக்கொள்ள சொன்னார். அது ரத்த சிவப்பு கலரில் இருந்தது. கை அளவு சிறியதாகவும், இடுப்பிலும் கைகளிலும் பட்டு border இருந்தது. அதற்கு match ஆக ஒரு சிவப்பு கலர் பட்டு புடவையும் கொடுத்தார்கள். முந்தைய நாளை போலவே இன்றும் புடவையுடன் தூங்கினேன். கனவில் பலமுறை நான் பெண் வேடத்தில் தோன்றினேன். என் தங்கைக்கு திருமணம். நானும் அவளும் ஒரே மாதிரி பட்டு புடவை கட்டிக்கொண்டு இருந்தோம். கைகளில் அழகாக மெகந்தி போட்டிருந்தேன். பிட்டம் வரை முடி இருந்தது. இன்னும் பல கனவுகள், அனைத்திலும் நான் பெண்ணாகவே இருந்தேன். காலை எழுந்திருக்க late ஆகிவிட்டது. ஹாலில் வந்து அமர...

நர்சிங் காலேஜ் - 8

"அண்ணா, அம்மா வர்ரதுக்குள்ள நாம சமையல் செஞ்சிடலாமா?" - ரம்யா என்னிடம் கேட்டாள். "எனக்கு சமையல் பத்தி ஒண்ணும் தெரியாது. நீதான் பண்ணனும்" "நீ என் கூட மட்டும் வந்து நில்லு. ஒரு பேச்சு துணைக்கு. இன்னைக்கு நான் உனக்கு கத்து தர்றேன்." தங்கையுடன் சமையலறைக்குள் சென்றேன். சப்பாத்தி செய்யலாம் என்று முடிவு செய்து மாவு பிசைந்தாள். எப்படி தேய்க்க வேண்டும் என சொல்லி தந்தாள். எளிதாகத்தான் இருந்தது. "நான் சப்பாத்தி மாவு தேய்க்கிறேன். நீ gravy செய்ய ஆரம்பி" - நான் சொன்னேன். சரி என்று அவள் ஆரம்பித்தாள். இருவரும் பேசிக்கொண்டே வேலைகளை செய்தோம். "அண்ணா, இன்னைக்கு முழுக்க saree கட்டியிருக்க.. எப்படி feel பண்ணுற?" "முதல்ல ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு. இத கட்டிட்டு நடக்குறதே கஷ்டமா இருக்கு. சின்ன சின்ன steps எடுத்து வைக்க வேண்டியிருக்கு." "அது இல்லண்ணா, ஒரு ஆம்பளையா புடவை கட்டுவது எப்படி இருக்கு." "கஷ்டமாத்தான் இருக்கு. இப்படி நடக்கும்னு நான் எதிர் பார்காவே இல்ல. கூடிய சீக்கிரம் இதிலிருந்து வெளி வரணும்." "ஏண்ணா? இப்போ புடவை ...

நர்சிங் காலேஜ் - 7

  இந்த ஊர் புதிது என்பதாலும், இப்போது புடவையில் இருப்பதாலும் எங்கேயும் வெளியே போக முடியவில்லை. மதியம் அம்மா செய்து வைத்த சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் தூங்கினோம். நான் இன்னும் புடவையில்தான் இருந்தேன். தூங்கி எழுந்த போது  புடவை கலைந்து இருந்தது. அம்மா சொல்லிகொடுத்தபடி மார்பின் மேல் உள்ள மடிப்புகளையும் முந்தானையையும் சரி செய்தேன். கொசுவத்தை சரி செய்ய முயன்றேன். இடுப்பின் அருகே மட்டும் சரி செய்ய முடிந்தது. கால்களின் அருகில் சரி செய்ய முடியவில்ல்லை. "அண்ணா, இருண்ணா நான் help பண்ணுறேன். நீ புடவை சரி பண்ணுறதை பாத்தேன். பொன்னுன்ங்க பண்ணுற மாதிரி அப்படியே செய்யுற. இப்படியே போனா என்னையும், அம்மாவையும் விட நீ ஒரு பொண்ணு மாதிரி ஆயிருவ. உன்கிட்டதான் நான் புடவை கட்ட கத்துக்கணும்." ரம்யா கீழே குனிந்து கொசுவத்தை சரி செய்தாள். மார்பிலும், பின்புறமும் மடிப்புகளை சரி செய்தாள். காலையில் கட்டியதை விட இப்போது மடிப்புகள் மிக நன்றாக இருப்பது போல தோன்றியது. எப்போதும் evening - ல் ரம்யா முகம் கழுவி மேக்கப் போட்டு fresh ஆவாள். நான் இது நாள் வரை அப்படி செய்ததில்லை. இன்று ரம்யா முழுவ...

நர்சிங் காலேஜ் - 6

  நான் புடவையுடன் ஹாலில் வந்து  டிவி பார்க்க ஆரம்பித்தேன். புடவை அணிந்து அமர்வது கடினமாக இருந்தது. எப்போதும் கால்களை கீழே தொங்க போட்டு உட்கார வேண்டி இருந்தது. மாறாக, எனது தங்கை ரம்யா நைட் pant அணிந்திருந்ததால் சோபாவில் படுத்தபடி இருந்தாள். எப்போதும் அவள் இப்படிதான் அமர்வாள் என்றாலும், இன்று என்னை கிண்டல் பண்ணுவதற்காக இவ்வாறு செய்கிறாள் என தோன்றியது. அம்மா வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு வந்தார். bra strap வெளிய தெரிய உட்கார்ந்திருந்தேன் போல. அம்மா வந்து ஜாக்கெட் ஐ இழுத்து விட்டு சரி பண்ணினார். "பொண்ணுங்க bra strap எப்போதும் தெரிய விட மாட்டாங்க. நீயும் பழகிக்கணும்." "சரிம்மா." "இன்னைக்கு சொல்லிகொடுத்து ஞாபகம் இருக்கா? நாளைக்கு பகல்ல நீயா புடவை உடுத்த முயற்சி பண்ணு." "அம்மா, நான் தூங்க போறேன். இப்போ புடவையை கழட்டிடட்டா ?" "சரி. கழட்டிடு." - அம்மா அனுமதித்தார் மறுநாள் காலை அம்மா வேலைக்கு செல்லும் முன் அழைத்தார். "இதோ, என்னோட ஒரு புடவை எடுத்து வச்சிருக்கேன்" என ஒரு ப்ளைன் green புடவையை காட்டினார். border-ல் மட்டும் embroidary பண்ணி...

நர்சிங் காலேஜ் - 5

  "இன்னும் ஒரு ப்லெளஸ் இருக்கு. அதயைும் போட்டு பாத்துரலாம்." - அம்மா அந்த ப்லௌஸை மாட்டிவிட்டார்கள். எனக்கு அது முந்தையதை விட கொஞ்சம் பெரிதாக மற்றும் எளிதாக இருந்தது. ஆனால் அம்மாவும் ரம்யாவும், இது மிகவும் பெரிதாக இருப்பதாகவும், முதலில் போட்ட ப்லௌஸ் அளவுக்கே தைக்க வேண்டும் எனவும் முடிவு செய்தனர். "நாளை காலைல குளிக்கும் போது என்னை கூப்பிடு. உனக்கு மஞ்சள் பயத்த மாவு எல்லாம் தேய்ச்சு விடனும்" - அம்மா சொன்னார்கள். நாளை குளிக்கவே வேண்டாம் என நினைத்துக்கொண்டேன். மறுநாள் காலையில் முழிழ்த்த பின்பும் படுக்கையில் தூங்குவது போல் படுத்து கொண்டிருந்தேன். இன்று அம்மாவுக்கு அலுவலகம் உள்ளது. காலையில் சீக்கிரமே கிளம்பி விட்டார்கள். அம்மா சென்ற பின்தான் படுக்கையில் இருந்து எழுந்திருந்தேன். பின்னர் அம்மாவிடம் இருந்து போன் வந்தது. Speaker  Phone -ல் போட சொன்னார்கள். நானும் ரம்யாவும் கேட்டோம். "ராஜா, முதல் வேலையா முகத்த நல்ல ஷேவ் பண்ணிடு. உனக்கு இன்னும் நல்ல மீசை தாடி வளர ஆரம்பிக்கலதான். இருந்தாலும் முகத்துல கொஞ்சம் முடி இருக்கு. புடவை கட்டும்போது இப்படி இருந்தா எல்லோரும் கிண்டல் பண...