என் பெயர் வசந்தா. எனக்கு வயது 24. இப்போதுதான் கல்லூரி மேற் படிப்பு முடித்து முதல் முறையாக ஒரு அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்து உள்ளேன். நான் ரொம்ப முற்போக்கு சிந்தனை கொண்ட இந்த காலத்து படித்த பெண். எனக்கு எப்போதும் ஆண்களுக்கு அடங்கி நடக்க பிடிக்காது. எனக்கு அப்பா இல்லை. என் அம்மா தான் என்னை வளர்த்தார்கள். சிறிய வயதில் இருந்தே எனக்கு அவர்கள் தைரியத்தையும், தன்னம்பிக்கையும் ஊட்டி வளர்த்தார்கள். சின்ன வயதில் இருந்தே நான் ஆண்கள் உடைதான் அணிவேன், உடற் பயிற்சி எல்லாம் செய்வேன். கராத்தே கூட கத்து கொண்டு இருக்கிறேன். படித்தது பெண்கள் கல்லூரியில். முதல் முறையாக அலுவலகத்தில் தான் ஆண்களுடன் சேர்ந்து வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது. எனது ஊரில் இருக்கும் ஒரு பெரிய மனிதர் அவரது அலுவலகத்தில் எனக்கு வேலை போட்டு கொடுத்தார். அது ஒரு சின்ன அலுவலகம் தான். மொத்தமே எட்டு பேர் தான் வேலை செய்கிறார்கள். அது ஒரு புதிய கம்பெனி. அந்த பெரிய மனிதரின் பையன் IT லைனில் வெளி நாட்டு ஆர்டர் கைப்பற்றும் முயற்சியில் ஆரம்பித்தது. அவன் வெளி நாட்டில் வேலை பார்க்கிறான். அவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. அவனுக்கு வயது ஒரு 3...