Monday 4 January 2021

நர்சிங் காலேஜ் - 8

"அண்ணா, அம்மா வர்ரதுக்குள்ள நாம சமையல் செஞ்சிடலாமா?" - ரம்யா என்னிடம் கேட்டாள்.


"எனக்கு சமையல் பத்தி ஒண்ணும் தெரியாது. நீதான் பண்ணனும்"

"நீ என் கூட மட்டும் வந்து நில்லு. ஒரு பேச்சு துணைக்கு. இன்னைக்கு நான் உனக்கு கத்து தர்றேன்."

தங்கையுடன் சமையலறைக்குள் சென்றேன். சப்பாத்தி செய்யலாம் என்று முடிவு செய்து மாவு பிசைந்தாள். எப்படி தேய்க்க வேண்டும் என சொல்லி தந்தாள். எளிதாகத்தான் இருந்தது.

"நான் சப்பாத்தி மாவு தேய்க்கிறேன். நீ gravy செய்ய ஆரம்பி" - நான் சொன்னேன்.

சரி என்று அவள் ஆரம்பித்தாள். இருவரும் பேசிக்கொண்டே வேலைகளை செய்தோம்.

"அண்ணா, இன்னைக்கு முழுக்க saree கட்டியிருக்க.. எப்படி feel பண்ணுற?"

"முதல்ல ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு. இத கட்டிட்டு நடக்குறதே கஷ்டமா இருக்கு. சின்ன சின்ன steps எடுத்து வைக்க வேண்டியிருக்கு."

"அது இல்லண்ணா, ஒரு ஆம்பளையா புடவை கட்டுவது எப்படி இருக்கு."

"கஷ்டமாத்தான் இருக்கு. இப்படி நடக்கும்னு நான் எதிர் பார்காவே இல்ல. கூடிய சீக்கிரம் இதிலிருந்து வெளி வரணும்."

"ஏண்ணா? இப்போ புடவை கட்டியிருக்குரதுன்னாலதான என் கூட close எ இருக்க? மற்றபடி என்னைக்காவது எனக்கு தலை சீவி விட்டிருக்கியா? இல்ல kitchen ல தான் ஹெல்ப் பண்ணியிருக்கியா?"

"அது  சரிதான். புடவை கட்டியிருக்கும் போதுதான் இதெல்லாம் பண்ணனும்னு தோணுது. இல்லன்னா சமையலறை பக்கமே வர  மாட்டேன்."

"எனக்கு ஒரு promise பண்ணு. புடவை கட்ட வேண்டியிருந்தாலும் இல்லேன்னாலும் இப்போ மாதிரி என் கூட close ஆ இருக்கணும். அப்பப்போ எனக்கு மேக்கப் ல ஹெல்ப் பண்ணனும். என்ன டிரஸ் போடலாம்னு suggesstion கொடுக்கணும். ஒரு அக்கா இருந்தா எனக்கு என்ன பண்ணுவாளோ அதெல்லாம் நீ செய்யணும்."

"இதெல்லாம் ரொம்ப அதிகம். ஏதோ சூழ்நிலை காரணமா நான் கொஞ்ச நாள் புடவை கட்ட வேண்டியதா இருக்கு. நீ சொல்லுறத பாத்தா என்ன permanenent-ஆ உன் அக்கா ஆக்கிருவ போல இருக்கு."

"அப்படி இல்லண்ணா.. நான் என்ன உன்ன எப்போதும் புடவை கட்டிட்டா இருக்க சொல்லுறேன். இப்போ இருக்குற மாதிரி எப்போதும் என் கூட பேசிட்டு இரு. அது போதும்."

"சரி. முயற்சி பண்ணலாம்."

"அப்புறம் இன்னொரு விஷயம். இப்போ நீ நல்லா புடவை கட்ட ஆரம்பிச்சிட்ட.. நீதான் எனக்கு புடவை கட்ட சொல்லி தரணும். "

நான் பதில் சொல்லாமல் அவள் தலையில் விளையாட்டாக குட்டினேன்.

இவ்வாறு பேசிக்கொண்டே dinner செய்து முடித்து விட்டோம். அதே நேரத்தில் அம்மாவும் வந்தார்கள். சாப்பிட ஆரம்பித்தோம்.

"ராஜா, உன் ஜாக்கெட் எல்லாம் தச்சு வாங்கிட்டு வந்துட்டேன். 6 வெள்ளை கலர் ஜாக்கெட் இருக்கு. ஒண்ணொண்ணும் ஒவ்வொரு ஸ்டைலில் தச்சிருக்கு. mostly back டிசைன் மட்டும் தான் change ஆகும். மத்தபடி எல்லாம் ஒரே அளவுதான். அப்புறம் ஒரு 5 ஜாக்கெட் வேற வேற கலர்ல வாங்கிட்டு வந்துருக்கேன். இப்போ நீ என்கிட்ட உள்ள எல்லா புடவையும் கட்டி பழகலாம். எல்லா ஜாக்கெட்லயும் மார்ல கொஞ்சம் ஸ்பான்ஜ் வச்சு தைச்சு வாங்கி இருக்கேன். அதனால உன் வயசு பொண்ணுக்கு இருக்கிறது மாதிரியே உனக்கும் breast இருக்குற மாதிரி தெரியும்." - அம்மா என்னிடம் சொன்னார்.

"ரம்யா, உனக்கும் uniform தச்சு வாங்கியாச்சு. நீயும் ட்ரை பண்ணி பாத்து ஏதாவது alter பண்ணனும்னா சொல்லு." - அம்மா ரம்யாவிடம் சொன்னார்.

அம்மா நான் புடவை கட்டியிருப்பதை நோட்டம் விட்டார்கள்.

"ராஜா, நீ புடவை ரொம்ப நல்லா கட்டியிருக்க.. எப்போ கட்டுன்ன? கொஞ்சம் எழுந்த்ருச்சு நில்லு.. எப்படி இருக்குன்னு பார்ப்போம்."

"காலைலயே கட்டிடோம்மா. அப்புறம் evening சரி செய்தோம்." - எழுந்து நின்று கொண்டே சொன்னேன்.

"மேக்கப் எல்லாம் பலமா இருக்கு" - அம்மா கிண்டலாக சொன்னார்.

"நான்தாம்மா, கொஞ்சம் fair & lovely ம் powder ம் போட்டு விட்டேன். சின்ன போட்டு வச்சேன். lipstick வேண்டாம்னு சொல்லிட்டான்." - ரம்யா சொன்னாள்.


"ரொம்ப சூப்பரா இருக்க ராஜா.. நீ மட்டும் பொம்பள புள்ளயா இருந்தா சந்தோஷ பட்டிருப்பேன். இதெல்லாம் இன்னும் ஒரு வாரமோ ரெண்டு வாரமோ.." - அம்மா.

"அம்மா, ராஜாவுக்கு ஏதாவது தோடு வாங்கணும். காது வெறுமனே இருக்கிறது நல்லா இல்ல."

"நாளைக்கு வர்றப்பா clip பண்ற மாதிரி தோடு வாங்கிட்டு வரேன். தேவைப்பட்டா காது குத்திக்கலாம். காது குத்திட்டா நம்மளோடதையே போட்டுக்கலாம். நாமும் அவனோடத போட்டுக்கலாம்.." - அம்மா

எனக்கு காது குத்தி விடுவார்களோ என பயமாக இருந்தது.

"அதெல்லாம் வேண்டாம். நீங்க clip பண்ற மாதிரியே தோடு வாங்கிட்டு வாங்க." - நான் சொன்னேன்.

"சரி சீக்கிரம் சாப்ட்டு முடிச்சிட்டு வாங்க. ராஜாவோட ஜாக்கெட் எல்லாம் ட்ரை பண்ணனும்"

No comments:

Post a Comment