Monday 4 January 2021

நர்சிங் காலேஜ் - 11

 மறுநாள் காலை ரம்யா காலேஜ் சென்றுவிட்டாள். அம்மா ஆபீஸ் போய் விட்டார்கள். நான் மட்டும்தான் தனியாக இருந்தேன். அவர்கள் இருவரும் சென்ற பிறகு நான் குளித்து புடவை கட்டி ரெடி ஆகி விட்டேன். அம்மா லஞ்ச் செய்து வைத்து விட்டார்கள். வேறு ஏதும் வேலை இல்லை. திரும்ப திரும்ப கண்ணாடியை பார்த்து கொள்வதும் மேக்கப் சரி செய்வதுமாக இருந்தேன். ரம்யா இல்லாமல் போர் அடித்தது.


முதல் நாள் என்பதால் சீக்கிரமே காலேஜ் விட்டு விட்டார்கள் போல. நான் மதியம் சாப்பிட்டுவிட்டு டிவி பார்த்துக் கொண்டிருந்தேன். ரம்யா வந்து விட்டாள்.

"ரம்யா, நீ இல்லாம இன்னைக்கு ரொம்ப போர் அடிச்சிருச்சு." - என்றேன்.

"இன்னும் ரெண்டு நாள் தான்..அப்புறம் உனக்கும் காலேஜ் திறந்துடுவாங்க."

"அதை நினைத்தால்தான் பயமா இருக்கு. எப்படி சமாளிக்க போறேன்னு தெரியல.."

"நீ வருத்தபட அவசியமே இல்லைண்ணா.. ஒரு வாரத்துக்குதான புடவை கட்ட வேண்டியிருக்கும்னு சொன்னாங்க. இல்லன்னாலும் நீ புடவை கட்டிட்டு போனா உனக்கும் மத்த பொண்ணுங்களுக்கும் ஒரு வித்தியாமும் இருக்காது."

"நான் மட்டும் தான் அங்க ஒரே பையன். எல்லா பொண்ணுங்களும் என்ன கிண்டல் பண்ணுவாங்களே!"

"அதல்லாம் இல்லைண்ணா.. ஒரு நாள் இல்ல ரெண்டு நாள் கிண்டல் பண்ணுவாங்க. அதுக்கப்புறம் எல்லாரும் உன்கிட்டதான் friend ஆ இருக்கணும்னு ஆசை படுவாங்க."

மீதமுள்ள நாட்களும் இவ்வாறே கழிந்தன. நான் எப்போதும் புடவையிலேயே இருந்தேன். சமாளித்து  என்ற நம்பிக்கை வந்து விட்டது. என் தங்கையிடம் இருந்து பெண்கள் என்னவெல்லாம் பேசுவார்கள் எப்படி பதில் சொல்வது எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டேன். மேக்கப் மற்றும் dress பற்றித்தான் முக்கியமாக பேச்சு இருக்குமாம். இப்பொழுது மேக்கப் போடுவதிலும் expert ஆயிருந்தேன். தினமும் காலையில் ரம்யாவை நான்தான் ரெடி செய்து அனுப்பி வைத்தேன். அவள் கூந்தலை சீவி முடிப்பது, light ஆன மேக்கப் என அனைத்தையும் நானே அவளுக்கு செய்து விட்டேன்.

இதோ நான் காலேஜ் செல்ல வேண்டிய நாளும் வந்து விட்டது. எனக்கு 10 மணிக்குதான் காலேஜ் ஆரம்பம். அனால் ரம்யா 9 மணிக்கு கல்லூரியில் இருக்க வேண்டும். முதலில் அவள் ரெடி ஆவதற்கு உதவினேன். பின்னர் நானும் ரெடி ஆக தொடங்கினேன்.

வெள்ளை கலர் உள்பாவாடை எடுத்து இடுப்பில் கட்டினேன். bra மற்றும் blouse அணிந்தேன். blouse-ல் என் முதுகு முழுவதும் திறந்து இருப்பது போல உணர்ந்தேன். மற்ற students எப்படி blouse போட்டு வருகின்றனர் என பார்க்க வேண்டும். மேக்கப் டேபிள் முன் அமர்ந்தேன்.

ரம்யா கிளம்ப வேண்டிய நேரம் வந்து விட்டது. "all the best" என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டாள்.

நான் சிறிய தோடு போட்டு கொண்டேன். மிகவும் light - ஆக மேக்கப் போட்டேன். இன்று காலையில்தான் ஷேவ் செய்திருந்தேன். கண்ணாடியில் திரும்ப திரும்ப பார்த்து புடவை மேக்கப் அனைத்தையும் சரி செய்தேன். இதோ கல்லூரிக்கு கிளம்பி விட்டேன். இன்று ஒரு நாள் அம்மா என்னை drop செய்வதாக கூட்டி சென்றார். அம்மாவின் இரு சக்கர வாகனத்தில் அமர்ந்தேன். புடவை கட்டியிருப்பதால் பெண்கள் போல இரண்டு கால்களையும் ஒரே பக்கத்தில் போட்டு அமர வேண்டியிருந்தது.

No comments:

Post a Comment