Tuesday 3 May 2016

நிர்மல் நிர்மலாவாகிய கதை

என் பெயர் நிர்மல். வயது 27. ஒரு வேலையில்லா பட்டதாரி. ஒரு சிறிய நடுத்தர அளவான குடும்பத்தின் மூத்த மகன். என் தாய், தந்தை, தங்கை மற்றும் தம்பியுடன் வாழ்ந்து வந்தேன். என் தந்தை ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அம்மா ஹவுஸ் ஃவைப். தங்கை கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தாள். தம்பி +2 படித்துக் கொண்டிருக்கிறான். நான் நன்றாக படித்ததால் பத்தாம் வகுப்பில் மாநில அளவில் மூன்றாம் இடத்திலும் பன்னிரன்டாம் வகுப்பில் இரண்டாம் இடமும் வந்தேன். அதனால் எனக்கு merritல் அண்ணா பல்லைல்கழகத்தில் இடம் கிடைத்தது. என் தந்தையும் என் குடும்ப சூழ்நிலை பற்றி கவலைப்படாமல் என் படிக்க வைத்தார். நானும் படித்து முடித்து பல இடங்களில் முயற்ச்சித்தும் தகுந்த வேலை கிடைக்காமல் இருந்தேன். பத்தாவது படிக்கும்போதே எனக்கு பெண்களைப்போல உடையணிய ஆசை. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அம்மா மற்றும் தங்கையின் உடைகளை அணிந்து சந்தோஷப்படுவேன். என் குடும்ப சூழ்நிலை காரணமாக என்னுடைய ஆசைகளை அடக்கிக்கொண்டு வாழ்ந்து வந்தேன்.
ஒருநாள் என் நண்பனின் தந்தையின் ஆலோசணை மற்றும் சிபாரிசின் மூலம் வங்கியில் கடன் வாங்கி சொந்தமாக ஒரு சிறுநிறுவனத்தை துவங்கினேன். இரண்டே வருடங்களில் கடுமையாக உழைத்து ஒரு நல்ல நிலைமைக்கு வந்தேன். என் தந்தை என் படிப்பிற்க்காக வாங்கிய கடனையும் வங்கியில் வாங்கிய கடனையும் அடைத்தேன். ஒரு அழகிய பெரிய வீட்டைக்கட்டி வாடகை வீட்டில் வாழ்ந்த நாங்கள் எங்கள் சொந்த வீட்டிற்க்கு மாறினோம். மீண்டும் என்னுள் இருந்த நிர்மலா உயிர் பெற்றாள். தினமும் இரவு எனக்கு பிடித்த புடவை, சுடிதார், நைட்டி அணிந்து சந்தோஷமாக வாழ்ந்து வந்தேன்.
என் கடின உழைப்பால் என் நிறுவனமும் வளர்ந்து நல்ல நிலைமைக்கு வந்தேன். என் தங்கைக்கும் அவள் காதலித்தவனையே இருவரின் பெற்றோர் சம்மதமுடன்திருமணம் வெகுவிமரிசையாக நடத்தினேன். என் தம்பியும் நன்றாக படித்து அவன் விருப்பியவாரே அவனும் அமெரிக்காவில் ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து செட்டில் ஆனான். இனிமேல் நான் இந்தியா வரமாட்டேன். என் அமெரிக்க மனைவியுடன் இங்கு தான் இருப்பேன் என்று கூறிவிட்டான் . இதைக்கேட்ட என் தந்தை மாரடைப்பில் காலமானார். சில மாதங்கள் கழித்து என் அம்மாவும் என் திருமணம் பற்றி என்னிடம் பேசினார். அப்போது நான் என் அம்மாவிடம் என் மனதில் உள்ள ஆசைகளை சொன்னேன். எனக்கு பெண்களைப்போல உடையணியும் பழக்கம் சிறுவயதில் இருந்து இருக்கிறது. மேலும் என் மனைவியாக வருபவள் உங்களிடம் பாசமாக நடந்துக் கொள்வாள் என்றும் உறுதியாக சொல்லமுடியாது. எனவே எனக்கு திருமணம் செய்ய விருப்பமில்லை என்று சொனனேன். என் அம்ம அப்படியென்றால் நீ திருநங்கையாக மாறப்போகிறாயா என்று கேட்டார். நான் அதற்கு இப்போது இருக்கும் நிலையில் என் தொழில் மற்றும் தங்கையின் வாழ்க்கை பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதால் திருநங்கையாக மாறும் எண்ணமில்லை, நான் ஒரு ஆண் தான் பெண்களைப்போல உடையணிய பிடிக்கும் அவ்வளவு தான் என்றேன். என் அம்மாவிடம் நான் வெளியுலகத்திற்க்கு உங்கள் மகன் நிர்மலாகவும் மனதளவில் உங்கள் மகள் நிர்மலாவாகவும் கடந்த 15 வருடங்களாக வாழ்ந்து வருகிறேன். என் வாழ்நாள் முழுதும் உங்களை பிரியமாட்டேன். அம்மா என்னை உங்கள் மகள் நிர்மலாவாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அம்மாவின் காலில் விழுந்து அழுதேன். என் அம்மா எதுவும் சொல்லாமல் அழுதுக்கொண்டே முதலில் சாப்பிடு மற்றதை காலை பேசிக்கொள்ளலாம் என்று சொல்லி அவரது அறைக்கு போய்விட்டார். எனக்கு சாப்பிட பிடிக்காமல் என் அறைக்கு சென்றேன். அன்று இரவு நான் நீண்ட நாள் கழுத்து ஆணுடையில் தூங்கினேன். எனக்கு நரகவேதனையாக இருந்தது. எப்போது தூங்கினேன் என்றே தெரியவில்லை.
மறுநாள் காலை என் அம்மா என் அறைக்கு வந்து என்னை எழுப்பினார். எனக்கு என் அம்மாவைப் பார்க்க தர்மசங்கடமாய் இருந்தது. அம்மா என்னிடம் நிர்மலா எழுந்துரிடி என் செல்லமே என்றார். எனக்கு வானத்தில் பறப்பதை போன்று உணர்ந்தேன். அம்மா என்னை உங்க மகளா ஏத்துகிட்டீங்களா இல்ல என் சந்தோஷத்துக்காக நிர்மலானு கூப்பிடுரீங்களா என்றேன். அம்மா இந்த குடும்பத்திற்காக நீ உன்னோட சந்தோஷங்கள் எல்லாத்தையும் இழந்துட்டடி இனிமேல் என் மூத்த மகளோட சந்தோஷம் தான் எனக்கு முக்கியம். மனப்பூர்வமா உன்னை என் மகளா ஏத்துகிட்டேன்டீ நிர்மலா முதல்ல இந்த காபிய குடிச்சுட்டு வாடி என் ராசாத்தினு என் நெற்றியில் பாசமா முத்தம் கொடுத்தாங்க. நானும் குளித்துவிட்டு என் தொழிற்சாலைக்கு கிளம்பினேன். அம்மா என்னிடம் நிர்மலா இன்னக்கி வெள்ளிக்கிழமைடி ஒரு 5 மணிக்கு வீட்டுக்கு வந்துடுமானு சொன்னாங்க. எனக்கு மறுபிறவி எடுத்த உற்சாகம். மாலை 5 மணிக்கு வீட்டுக்கு வந்தேன். அம்மா சீக்கிரம் குளிச்சுட்டு வாடி. மறக்காம முகத்துக்கு மஞ்சள் பூசிக்க எல்லாம் தயாரா வைச்சிருக்கேன்னு சொல்லிட்டு எனக்கு என் பொண்ணு நிர்மலாவ பாக்கனும்னு காலைல இருந்து காத்துகிட்டு இருக்கேனு சொன்னாங்க. நானும் உற்சாகமா குளிக்கப் போனேன். குளிச்சுட்டு வந்து பாத்தா என் கட்டில் மேல ஒரு பட்டுப்புடவை, ரவிக்கை உள்ளாடைகள் எல்லாம் இருந்துச்சு. எனக்கு ஒரே இன்ப அதிர்ச்சி. அம்மா பூஜையறையில இருந்து நிர்மலா அந்த புடவைய கட்டிகிட்டு பூஜையறைக்கு உடனே வாடினு கூப்பிட்டாங்க. நானும் என்4 அடி WIG அழகா பின்னி அந்த புடவைய கட்டிகிட்டுபோனேன். அம்மா 
எனக்கு ஒரு ஆறு முழமிருந்த மல்லிகைபூவ தலையில வச்சிவிட்டு என் கண்ணே பட்டிடுச்சுடி தங்கமேனு திருஷ்டி சுத்தி என்னை விளக்கு ஏற்ற சொன்னாங்க. நானும் விளக்கேற்றி சாமி கும்பிட்டேன். பிறகு வாழும் தெய்வமான என் அம்மா காலில் விழுந்து அம்மா உங்க மகள ஆசிர்வாதம் பண்ணுக்கனு அம்மா காலில் விழுந்து வணங்கினேன். அம்மா புடவை பிடிச்சிருக்கா நிர்மலானு கேட்டாங்க. நானும் ரொம்ப பிடிச்சிருக்கு சரி எப்படீ சரியான அளவுல எனக்கு ரவிக்கை தெச்சிங்கனு கேட்டேன். அம்மா உன்னோட ரவிக்கை எடுத்துகிட்டு போய் தான் தெச்சேன் நிர்மலானு சென்னாங்க. இன்றும் நான் பாதுகாத்துவரும் பொக்கிஷம் அது. என்னை தவிர யாரையும் அந்த புடவைய தொடக்கூட அனுமதிக்க மாட்டேன். இப்படியே என் வாழ்க்கை பகலில் நிர்மலாகவும் இரவில் நிர்மலாவாகவும் சந்தோஷமா வாழ்ந்து வந்தேன்.

ஒருநாள் மறுபடியும் என் கல்யாணத்த பத்தி பேச ஆரம்பிச்சாங்க நான் அம்மா கிட்ட எனக்கு கல்யாணத்துல விருப்பமில்லைனு சொன்னேன். அம்மா என்கிட்ட எனக்கு பிறகு உன்ன பாத்துக்க ஒருத்தி வேணும்னு சொல்லி உன் அம்மாவோட ஆசைய நிறைவேத்துவேனு சத்தியம் பண்ண சொன்னாங்க. நானும் மறுக்க முடியாம சத்தியம் பண்ணினேன். ஒருநாள் என் தங்கை என் வீட்டிற்க்கு வந்தாள். அன்றும் நீண்ட நாட்களுக்கு பிறகு நிர்மலாக உறங்கினேன். அம்மா என் தங்கை கர்ப்பமாக இருப்பதாக சொன்னார். அனைவருக்கும் விருந்து கொடுக்க என் வீட்டில் ஏற்பாடு செய்தேன். என் தங்கையின் மாமியார் வீட்டிலுருந்து அனைவரும் வந்திருந்தனர். எங்கள் இரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் இருந்தோம். உறவினர்களுக்கு கூட நான் சொல்லவில்லை. அப்போது மீண்டும் என் தங்கை என்னிடம் நீங்க எப்ப கல்யாண சாப்பாடு போடப்போரிங்கனு கேட்டாள். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நான் அம்மாவின் முகத்தை பார்த்தேன். அப்போது என் தங்கையின் மாமியார் எங்க பெரிய மகளை நிர்மலுக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்னு எங்களுக்கு ரொம்ப ஆசை. ஆனால் உங்க விருப்பம் என்ன சொல்ரீங்கனு கேட்டாங்க. அந்தப் பெண் என் தங்கையின் கணவனின் அக்காதான். அவங்க கல்யாணத்தின் போது மேல்படிப்பிற்காக இங்கிலாந்தில் இருந்ததால் என் தங்கையின் திருமணத்திற்க்கு வரமுடியவில்லை. அவளின் பெயர் கார்த்திகா. அவளின் பெற்றோர் என் மகளிடம் பேசினோம். அவளுக்கும் நிர்மலை திருமணம் செய்துக் கொள்வதில் சம்மதம் என்று சொல்லிவிட்டாள் என்றார்கள்.என் அம்மாவும் தங்கையும் என்னை தனியே அழைத்து சென்றனர். அப்போது என் தங்கை என்னிடம் அக்கா உங்கள கல்யாணம் பண்ணிக்க மாமாவும் ரொம்ப ஆசைப்படுரார் என்றாள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என் அம்மா என்னிடம் ஆமாம் நிர்மலா உன் தங்கைக்கு உன்னைப்பத்தி எல்லாம் தெரியும். அவகிட்ட ஒருநாள் எல்லாத்தையும் சொல்லிட்டேன். அவளும் உன்ன அக்காவாகதான் நினைக்குறாள். கார்த்திகாவுக்கு அவங்க வீட்டில கல்யாணம் பத்தி பேசும் போது அவளுக்கு உன்னோட மனைவியாகதான் வாழ விருப்பம்னு அவங்க அப்பா அமாமாகிட்ட சொல்லிட்டாளாம். உன் தங்கச்சிதான் கார்த்திகாகிட்ட கல்யாணத்துக்கு பிறகு என் அம்மாவையும் பாசமா பாத்துக்குர ஒருத்தி கிடைக்கமாட்டா அதனால கல்யாணம் ஒண்ணிக்க வேணாம்னு இருக்கனு சொல்லி இருக்கா அப்ப கார்த்திகா எனக்கு நிர்மல் மாமாவும் அத்தையும் ரெண்டு கண்கள் போல பாத்துப்பேன் சித்ரானு சொல்லிட்டாளாம். அப்புறம் சித்ரா கார்த்திகாகிட்ட உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும் அதிர்ச்சியா இருக்கும் இந்த விஷயத்தை யார்கிட்டயும் சொல்லமாட்டேனு சத்தியம் பண்ணுங்கனு சத்தியம் வாங்கிட்டு உன்னோட பெண்கள் உடையணியும் ஆசைகளையும் சொல்லிஇருக்கா. அப்ப கார்த்திகா எனக்கு இதில வருத்தமே இல்ல இங்கிலாந்துல நிறை CD PARLOURS இருக்கு. இந்த மாதிரி ஆசையுள்ளவங்க தாலி கட்டி மனைவியா ஏத்துகிட்ட ஒருத்திக்கு எப்பவும் துரோகம் பண்ணமாட்டாங்க. எனக்கு நிர்மல் மாமாவ கல்யாணம் பண்ணிக்க முழு சம்மதம். சித்ரா. ஆனால் இந்த விஷயம் எனக்கு உனக்கு அத்தை நிர்மல் மாமா நாலுபேரதவிர என் அப்பா அம்மா தம்பி யாருக்கும் தெரியகூடாதுனு சொல்லிட்டானு சொன்னாங்க. எனக்கு சம்மதம் அம்மானு சொன்னேன். அம்மா ஹாலுக்கு வந்து நிர்மல் கார்த்திகா கிட்ட கொஞ்சம் பேசனும்னு சொல்ரானு சொன்னாங்க. சரி போய் பேசிட்டு வாங்கனு பெரியவங்க சொன்னதும் ஒரு அறைக்குள்ள போனோம். அங்க வந்த கார்த்திகா என்கிட்ட மாமா என்ன பிடிச்சுருக்கானு கேட்டா. நான் ரொம்ப அதிர்ஷசாலி கார்த்திகா என்ன முழுசா புரிஞ்சுகிட்ட உன்ன கல்யாணம் பண்ணிக்கபோர நான் அதிர்ஷடசாலி தானேனு சொன்னேன். அப்ப என் ஒண்களின் ஓரத்தில் கண்ணீர் வந்தது. அப்ப கார்த்திகா என்னருகில் வந்து அழாதே நிர்மலா உனக்கு சாகுர வரைக்கும் நல்ல தோழியாக இருப்பேன்டினு சொல்லி இருக்கி அணைத்தாள். என் மாமாவுக்கு அன்பான மனைவியாகவும் நிர்மலாவுக்கு நல்ல தோழியாகவும் இருப்பேன் என்றாள். அடுத்த மாதமே எங்கள் திருமணம் நடந்தது. என் மனைவி கார்த்திகா தான் அவளது தோழி நிர்மலா அணியும் உடைகளை தேர்ந்தெடுக்கிறாள். நானும் அவளும் இப்போது கணவன் மனைவி மட்டுமல்ல அன்பான தோழிகள். இன்று இரண்டு குழந்தைகளுடன் நிர்மலாகவும், நிர்மலாவாகவும் என் வாழ்க்கை சந்தோஷமாக தொடர்கிறது.

No comments:

Post a Comment