Skip to main content

நர்சிங் காலேஜ் - 7

 இந்த ஊர் புதிது என்பதாலும், இப்போது புடவையில் இருப்பதாலும் எங்கேயும் வெளியே போக முடியவில்லை. மதியம் அம்மா செய்து வைத்த சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் தூங்கினோம். நான் இன்னும் புடவையில்தான் இருந்தேன். தூங்கி எழுந்த போது  புடவை கலைந்து இருந்தது.

அம்மா சொல்லிகொடுத்தபடி மார்பின் மேல் உள்ள மடிப்புகளையும் முந்தானையையும் சரி செய்தேன்.
கொசுவத்தை சரி செய்ய முயன்றேன். இடுப்பின் அருகே மட்டும் சரி செய்ய முடிந்தது. கால்களின் அருகில் சரி செய்ய முடியவில்ல்லை.

"அண்ணா, இருண்ணா நான் help பண்ணுறேன். நீ புடவை சரி பண்ணுறதை பாத்தேன். பொன்னுன்ங்க பண்ணுற மாதிரி அப்படியே செய்யுற. இப்படியே போனா என்னையும், அம்மாவையும் விட நீ ஒரு பொண்ணு மாதிரி ஆயிருவ. உன்கிட்டதான் நான் புடவை கட்ட கத்துக்கணும்."

ரம்யா கீழே குனிந்து கொசுவத்தை சரி செய்தாள். மார்பிலும், பின்புறமும் மடிப்புகளை சரி செய்தாள். காலையில் கட்டியதை விட இப்போது மடிப்புகள் மிக நன்றாக இருப்பது போல தோன்றியது. எப்போதும் evening - ல் ரம்யா முகம் கழுவி மேக்கப் போட்டு fresh ஆவாள். நான் இது நாள் வரை அப்படி செய்ததில்லை. இன்று ரம்யா முழுவதும் நிகழ்ந்த பேச்சுகளில் நாங்கள் மிக close ஆகி விட்டதால்  அவள் என்னையும்  கூப்பிட்டாள்.

"வாண்ணா, நாம ரெண்டு பேரும் சேர்ந்து fresh ஆகலாம்."

அவளுடைய makeup table அருகே கூட்டி சென்றாள். சில துளி ஹேர்-ஆயில் கொடுத்து என் தலையில் தடவ சொன்னாள். அவளுடைய கூந்தல் நீளமானது. அவ்வப்போது cut செய்து விடுவாள். இருந்தாலும். இடுப்பு வரை இருக்கும். அவள் ஒரு stool-ல் அமர்ந்து கொண்டாள். என் கையில் oil பாட்டிலை கொடுத்தாள்.

"அண்ணா, என் தலைக்கு எண்ணெய் தேச்சு விடு." - என்றாள்.

நான் அவள் தலையில் இருந்து தேய்க்க ஆரம்பித்தேன். எங்கு அதிகமாக, எங்கு குறைவாக தேய்க்க வேண்டும் என எல்லாம் சொல்லி கொடுத்தாள். உச்சந்தலையில் சிறிது நேரம் massage செய்ய சொன்னாள். அதனால் ரத்த ஓட்டம் அதிகரித்து முடி நன்றாக வளருமாம். சீப்பை வைத்து மேலிருந்து கீழ் வரை நன்றாக வார சொன்னாள். சில இடங்களில் சீப்பு முடிக்குள் சிக்கியது. எப்படி சிக்கு எடுப்பது எனவும் சொன்னாள். மேலிருந்து கீழ் வரை பல முறை வாரினேன். இப்போது அவள் முடி straight ஆகிவிட்டது. ஜடை போட ஆரம்பித்தாள். மொத்த முடியையும் வாரி, பின் மண்டையில் நடுவில் ஒரு கற்றை முடி எடுத்து ஒரு hair barrette மாட்டினாள். கூந்தலை முன்று பாகமாக பிரித்தாள். எப்படி பின்ன வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இரண்டு பின்னல் போட்டாள். பின்னர் என்னை பின்ன சொன்னாள். ஏனோ எனக்கு மறுக்க தோன்றவில்லை. அவள் சொல்லியது போலவே மீதமுள்ள கூந்தலையும் பின்னி முடித்தேன். இறுதியில் உள்ள இரண்டு பின்னல்களை அவிழ்த்துவிட்டு ஒரு hairband மாட்டி கொண்டாள்.

"very good அண்ணா! நல்லா பின்னி விட்டுருக்க. வா மேக்கப் போட்டு ரெடி ஆகலாம்."

இருவரும் குளியலறை சென்றோம்.

"இந்தாண்ணா, இந்த face cleanser வச்சு முகத்த நல்லா கழுவிக்கோ."

இருவரும் நன்றாக முகம் கழுவினோம்.

"அண்ணா, நீ கொஞ்சம் மஞ்சள் தேய்ச்சுக்கோ."

அவள் மஞ்சள் தேய்க்கவில்லை. நான் மட்டும் மஞ்சள் தேய்த்து கொண்டேன்.

பின்னர் திரும்ப மேக்கப் டேபிள் சென்றோம். என்னை stool-ல் அமர செய்தாள்.

"இப்போ evening-ல heavy மேக்கப் வேண்டாம். so foundation போடல."

சிறிது fair&lovely எடுத்து என் முகத்தில் apply செய்தாள். பின்னர் சிறிது powder.

"Lipstick போடலாமா அண்ணா ? "

எனக்கு ஒரு புறம் lipstick உபயோகித்து பார்க்க ஆசையாக இருந்து. இருந்தாலும் உடனே சரி சொல்லி விட கூடாது என்பதற்காக, "இப்போ வேண்டாம். இன்னொரு நாள் பாத்துக்கலாம்" என்றேன்.

கடுகு அளவுள்ள ஒரு சிறிய கருப்பு பொட்டினை நெற்றியில் வைத்தாள். மேக்கப் மிகவும் light ஆக இருந்தாலும், பெரிய வித்தியாசத்தை உண்டாக்கியது. இப்போது ஒரு பெண் போலவே இருப்பதாக தோன்றியது.

"சூப்பரா இருக்குதுண்ணா, காதில தோடு மட்டும் போட்டுட்டா மொட்டை அடிச்ச பொண்ணு மாதிரியே இருப்ப. நாளைக்கு அம்மா வரும் போது துளை இல்லாம போடுற தோடு வாங்கிட்டு வர சொல்லுறேன். இல்லன்னா நாம ரெண்டு பேரும் நாளைக்கு கடைக்கு போய் வாங்கிட்டு வரலாம்?"

"காதில ஓட்டை இல்லாமலும் தோடு போடலாமா?"

"போடலாம்னா.. நாளைக்கு காட்டுறேன்."

பின்னர் ரம்யா ரெடி ஆக ஆரம்பித்தாள் . என்னிடம்  fair&lovely மற்றும் பவுடர் கொடுத்து மேக்கப் போட்டு விட சொன்னாள். நான் முடித்த பின் சில இடங்களில் சரி செய்து கொண்டாள். இருவரும் அக்கா தங்கை போலவே மாறி விட்டோம்.

Comments

Popular posts from this blog

My Real Crossdressing Story

எனக்கும் 2 அனுபவம் உண்டு. எனது ஆசைகளை தெரிய படுத்தியதால் எனது முதல் காதலை இழக்க வேண்டியதாயிற்று. அதன் பின் காதலே தேவை இல்லை என்ற எண்ணத்தில் வாழ்ந்து வந்தேன். ரகசியமாக பெண் ஆடைகளை அணிவத்யும் முற்றாக தவிர்த்து விட்டேன். சில வரடுங்கங்களின் பின் இன்னொரு பெண்ணிடம் நட்பு கிடைத்தது.. காலபோக்கில் அது வளர்ந்து ஒரு நாள் அவள் என்னிடம் அவள் காதலை தெரிவித்தாள். அவள் மீது விருப்பம் இருந்த போதும் அதற்கு தொடர்ந்து மறுப்பு கூறியே வந்தேன். என் விருபங்களை தெரிவித்தால் எவரும் விரும்ப மாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். ஒரு நாள் இருவருக்கும் இடையில் வாகு வாதம் பெரிதாகி சந்த்யாகிவிட்டது. அவள் எப்படியோ எனக்கு அவள் மீதி இருந்த விருப்பத்தை சற்று உணர்ந்திருந்தாள். கோவம் மேலிட்டு என்னை ஒரு ஓர் இனசெற்கை ஆளான(homosexual) அஹ எனக்கேட்டு விட்டாள். எனக்கு சிறுவயதிலிருந்தே பெண்கள் உடையில் ஆர்வம் இருந்தாலும் ஓர் இனசெற்கையில் விருப்பம் இல்லை. முழக்க முழுக்க ஆணாகவே இருந்தேன். பின்னர் ஒரு நாள் ஆவலுடன் தனியாக இருக்கும் பொழுது உண்மையை கூறிவிட்டேன். அவள் கோவத்தில் என் கன்னத்தில் அறைந்து விட்டு வீடு சென்றுவிட்டாள். மறுபடிய...

மேடமும் நானும் !....

நான் ஒரு தனியார் கம்பெனி உயர் அதிகாரி .புதிதாய் திருமணமானவன் .என் கதை கொஞ்சம் விசித்திரமானது ....நான் கொஞ்சம் கர்வியும் கூட .யாருக்கும் அடங்காதவன் .நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது .இதோ ..என் பிளாஸ் பேக் ...........அது ஒரு .கோ -எஜூகேசன் காலேஜ் .நான் ஸ்போர்ட்ஸ் மேன் .நிறைய விளையாட்டுகளில் பரிசு வாங்கியவன் .ஐந்தே முக்காலடி உயரத்தில் நல்ல உடல் கட்டோடு இருந்தேன் .என்னை காதலிக்க அழகான பெண்கள் பலர் முயற்சித்தனர் .அதில் ஒருத்தி அந்த கல்லூரியிலேயே பேரழகி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட சுஷா .....சுஷா என்னைவிட உயரம் .ஐந்தடி பத்து அங்குலம் .அராபிய குதிரை போன்ற உடம்பு ...நான் சுஷாவிடம் நன்றாக பேசினேன் ...நான் அவளுக்கு வாலிபால் கற்று தர  ,அவள் எனக்கு பேஸ்கட் பால் பயிற்சி அளித்தாள் . ஒரு கட்டத்தில் என்னை அறியாமல் ஒரு பெண்ணை காதலிக்க ஆரம்பித்தேன் .அவள் விளையாட்டில் ஆர்வம் கொண்டவள் அல்ல .படிப்பில் விருப்பம் கொண்டவள் .அழகானவள் .......அவள் தோழிகளோடு எப்போதும் இருப்பாள் .அவளின் தோழி சாந்திக்கு எப்போதும் என்னை கிண்டல் செய்வதே வேலை...............சாந்தி நல்ல சிவப்பு நிறம் .அளவான உயரம்...

வாடி என் !.... பட்டு ரோஜா!.....

எனக்கு பார்சலில் வந்திருந்த அந்த கவரை பிரித்து பார்த்தேன் .எனக்கு அதிர்ச்சியாக இருந்தது .அத்தனையும் போட்டோக்கள் .அதனுடன் ஒரு கடிதமும் இருந்தது .இந்த போட்டோ எப்படி வெளியில் போனது .குழம்பினேன் .நான் வசந்த் .எம் .காம்.,பி .ஜி .டி .சி.ஏ .,பி .பி.எம் .,உயர் படிப்பு படித்தவன் .பெரிய கம்பெனியில் அக்கவுண்ட்ஸ் ஆபீசர் ஆக இருந்தேன் .என் மனைவி ஹேமா கல்லூரி லெக்சரர் .இருவரும் நல்ல உயரம் .சிவப்பு நிறம் .அழகாய் இருப்போம் .புதியதாய் திருமணமானவர்கள் நாங்கள் .நான் போட்டோ க்ராபியில் ஆர்வமுள்ளவன் என்பதால் என் பணி பாதிக்காதபடி அடிக்கடி வெளியூர் நாலைந்துநாள் கிளம்பிவிடுவேன் .போட்டோ கிராபி டிரெயினிங் போய் வருவேன் . என்னுடைய தூரத்து உறவினர் எனக்கு நல்ல பழக்கம் .அவரும் நானும் சேர்ந்துதான் வெளியூர் போட்டோ கிராபி வகுப்புக்கு போவோம் .அவர் பிசினஸ் செய்கிறார் . அவர் என்னைவிட உயரம் குறைவு ஆனால் நல்ல கம்பீரம் .கட்டான உடல்.அவர் திருமணமாகி மனைவியை துரத்திவிட்டு தனியாக வசித்தார் .அவர் வீடு என் வீட்டில் இருந்து பத்து கிலோ மீட்டர் தூரம் உள்ளது .அவரிடமும் என்னிடமும் பைக் உண்டு .நான் ஆபீசில் இருந்து வந்தால் மோஸ்ட்லி அவர...