Tuesday 3 May 2016

தாயுமானவன்



என் பெயர் ஸ்வேதா. வயது 20. புனே திரைப்பட கல்லூரியில் படித்து வருகிறேன். என் தாய் தந்தை இருவரும் விவாகரத்து பெற்று 10 ஆண்டுகள் முன்னர் பிரிந்து வாழ்கின்றனர். எதற்காக விவாகரத்து பெற்றனர் என்று இன்றுவரை எனக்குத் தெரியாது. என் அம்மா இரண்டாவது திருமணம் முடிந்து இப்போது அமெரிக்காவில் இருக்கிறார். என் அப்பா சென்னையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். அவர் திரைப்படத்துறை தொடர்புடைய ஒரு பிரபல நிறுவனத்தை நிர்வகித்து வந்தார். நான் புனேயில் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தேன். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என் தந்தையை பார்க்க சென்னை வருவேன். சென்ற மாதம் என் தந்தையின் பிறந்தநாளை அவருடன் கொண்டாட சென்னைக்கு கிளம்பினேன். சென்னைக்கு வந்தேன். என் தந்தையின் பிறந்தநாளை கொண்டாட கேக் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தேன். என் வீட்டின் கதவு பூட்டியிருந்தது. என் அப்பா இன்னும் வீட்டிற்க்கு வரவில்லை என நினைத்து என்னிடம் இருந்த சாவியால் கதவை திறந்து வீட்டிற்க்குள் சென்றேன். வீடு முழுவதும் இருட்டாக இருந்தது. ஆனால் என் தந்தையின் படுக்கை அறையில் மட்டும் விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது. அங்கு சென்று பார்த்த நான் அதிர்ச்சியடைந்தேன்.
அங்கே என் தந்தை பாவாடை ரவிக்கை அணிந்துக் கொண்டிருந்தார். அப்பொழுது தான் புடவை கட்ட ஆரம்பித்தார். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. நான் கோபமாக அங்கிருந்து கிளம்ப நினைக்கையில் என் அப்பா என்னைப் பார்த்து விட்டார். அவரும் அதிர்ச்சியடைந்தார். அவருக்கு அவமானமாகப் போய்விட்டது. அவர் உடனே அணிந்திருந்த உடைகளை மாற்றி ஹாலுக்கு வந்தார். நான் மிகவும் கோபமாக அவரிடம் பேசவே பிடிக்காமல் ஸோஃபாவின் ஒரு மூலையில் அமர்ந்திருந்தேன். என் அருகில் வந்த அப்பா என் அருகில் வந்து தரையில் அமர்ந்தார். அவர் என் கைகளைப் பிடித்துக்கொண்டு ஓவென தேம்பித் தேம்பி அழுதார். ஸ்வேதா நீயும் என்னை விட்டுட்டு போய்விடாதே. நான் இந்த நிமிஷம் வரைக்கும் உயிர் வாழ்வதே உன் ஒருத்திக்காக தான். கொஞ்சம் நான் சொல்வதை கேட்டுட்டு உன் முடிவை சொல்லும்மா. நீ என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம். ஆனால் நீயும் என்னவிட்டுட்டு போய்விடாதேனு சொன்னார். நான் கோபமாக அவரது கைகளை உதறிவிட்டு என்ன சொல்லப் போறீங்கனு கேட்டேன். எனக்கு பத்தாம் வகுப்பில் இருந்தே பெண்களைப்போல உடையணிய பிடிக்கும். வீட்டில் யாரும் இல்லாத போது என் அக்காவின் உடைகளை அணிந்துக் கொள்வேன். என் திருமணத்திற்கு பிறகு நானும் பத்து வருடங்களாக எனக்கு ஆசை ஏற்படும் போது மிகவும் கட்டுப்பாட்டுடன் இருந்தேன். ஒரு கட்டத்திற்க்கு மேல் என்னால் முடியவில்லை. எனவே உன் அம்மாவிடம் எனக்கு இருந்த பெண்கள் உடையணியும் ஆசையைப் பற்றி சொல்லிவிட்டேன். ஆனால் உன் அம்மா என்னை பற்றி தவறாக நினைத்து என்னிடம் தினமும் சண்டை போட்டு நான் எவ்வளவோ கெஞ்சியும் கடைசியில் என்னுடன் வாழ விருப்பமில்லை என்று விவாகரத்து பெற்று நம்மை பிரிந்து சென்றுவிட்டாள். உன்னையும் தன்னுடன் அழைத்துச்செல்ல விருப்பமில்லை என்று என்னுடன் விட்டுச் சென்றாள். அன்றுமுதல் உனக்காக தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன். உன்னிடமும் என் பழக்கங்களை சொன்னால் எங்கே நீயும் என்னைவிட்டு போய்விடுவாயோ என்று மறைத்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு ஸ்வேதா என்று சொல்லிவிட்டு அவரது அறைக்கு சென்றுவிட்டார். நானும் பத்து வருடங்களுக்கு முன் நீதிமன்றத்தில்தான் என் அம்மாவை கடைசியாகப் பார்த்தேன். இந்த பத்து வருடங்களும் என் அப்பா என் மேலிருந்த பாசத்தினால் வேறு திருமணம் செய்துக்கொள்ளாமல் எனக்கு ஒரு தந்தையாக மட்டுமில்லாமல் ஒரு தாயாகவும் என் மனதில் தாயில்லாத குறை தெரியாமல் பாசமழை பொழிந்து எனக்காக தன் சுகங்களை இழந்து வாழந்த உத்தமர் அவரது இந்த ஆசையையும் எனக்காக விட்டுவிட தயாராக இருந்த என் தந்தையை அந்த நொடி முதல் என் தாயாகவும் நினைக்க ஆரம்பித்தேன். மறுநாள் அப்பாவின் அறைக்குச் சென்றேன். அங்கு என் தந்தை இல்லை. எங்கே சென்றிருப்பார் என்று தேடினேன். அவர் எனக்காக காபி தயார் செய்து எடுத்துக் கொண்டு வந்தார். நான் எதுவும் சொல்லாமல் அவர் கொடுத்த காபியை குடித்து விட்டு என் அறைக்கு சென்றுவிட்டேன். என் தந்தையும் குழப்பத்துடனே அலுவலகம் சென்றார். நானும் சிறிது நேரம் கழித்து கடைக்கு சென்று JEANS, TOPS மற்றும் சில உடைகள் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தேன். மறுநாள் என் தந்தையின் பிறந்தநாள். நான் காலையிலிருந்து என் தந்தையுடன் பேசவில்லை. புனேவில் இருக்கும் போது தினமும் அரைமணி நேரமாவது என் தந்தையுடன் பேசுவேன். மாலை என் தந்தை வாடிய முகத்துடன் வந்தார். என் அருகில் வந்து உனக்கும் நான் பெண்கள் உடையணிவது பிடிக்கவில்லை என்று புரிந்துக்கொண்டேன். இனிமேல் நான் பெண்களின் ஆடைகளை அணியமாட்டேன். நீயும் என்னிடம் பேசாமல் இருந்து விடாதே என்று சொன்னார். நானும் இரவு என்ன சமைக்கனும்னு கேட்டேன். உனக்கு என்ன பிடிக்குமோ அதையே சமைச்சுடு ஸ்வேதா எனக்கு பசிக்கல எதுவும் வேணாம்னு சொல்லிட்டு அவரோட அறைக்கு சென்று விட்டார். நானும் எதுவும் சமைக்காமல் என் அறைக்கு சென்று தூங்காமல் எப்ப மணி 11.59 ஆகும்னு காத்துகிட்டு இருந்தேன்.
சரியாக 11.59 க்கு என் தந்தையின் அறைக்குள் நான் வாங்கியிருந்த உடைகளையும் பிறந்தநாள் கேக்கையும் எடுத்துக் கொன்டு நுழைந்தேன். சரியாக 12 மணிக்கு அவரை எழுப்பி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று அவரது கன்னத்தில் முத்தமிட்டேன். அவருக்கு நான் அவருடன் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. அவரை தயாராக இருந்த கேக்கை வெட்டச் சொன்னேன். அதில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உமா என்று இருந்தது. என் தந்தையின் முழுப் பெயர் உமாபதி. அவருக்கு ஒன்றும் புரியவில்லை. நான் தான் என்ன அம்மா யோசிக்குரீங்க? முதல்ல கேக்க வெட்டுங்க. என் மன்னிச்சுடுங்க அம்மா உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி தரனும்னு தான் காலைல இருந்து நான் பேசாம இருந்தேன். இனிமேல் நீங்க எப்ப விரூம்புரீங்களோ அப்ப உங்களுக்கு பிடிச்ச உடையணிந்துக் கொள்ளுங்கனு சென்னேன். அப்பா இது என் அம்மாவுக்கு என் பரிசு. நான் காலையில எழுந்திருக்கும் போது என் அம்மாவோட முகத்தில தான் முழிக்கனும்னு ஆசைப்படுறேன் . குட்நைட்னு சொல்லிட்டு என் அறைக்கு சென்றேன். காலை என் அம்மா உமா என்னை காபி கொண்டு வந்து எழுப்பினார். என் அம்மா மிகவும் அழகாக சிவப்பு நிற பட்டுப் புடவைய கை நிறைய கண்ணாடி வளையல் அணிந்து நெற்றியிலும் வகிட்டில் குங்குமம் வைத்து அந்த உமாதேவியைப் போல பார்த்தவுடன் கையெடுத்து கும்பிடும் தேவதையாக எனக்கு தெரிந்தார். ஆனாலும் என் முகம் வாடியிருப்பதை பார்த்த அவர் உன் முகம் ஏன் வாடியிருக்குனு தெரியும் ஸ்வேதா. எனக்கு புடவை தான் ரொம்ப பிடிக்கும். JEANS, TOPS லாம் போட்டு பழக்கமில்லமா கோவிச்சுக்காதனு சொன்னாங்க. நானும் சரி இன்னைக்கு முழுக்க என் அம்மா என் கூட இருக்கணும் இது என் கட்டளைனு சொன்னேன். அம்மாவும் நானே இன்னக்கு முழுதும் உமாவாகதான் என் பெண்ணோட இருக்கனும்னு ஆசைப்பட்டேன் ஸ்வேதானு சொல்லிட்டு என்னை குளிச்சுட்டு வரச் சொன்னாங்க. நானும் குளிச்சுட்டு வந்து காலை சிற்றுன்டி சாப்பிட்டு நீங்க இன்னைக்கு முழுதும் எனக்கு அம்மாவாக இருக்கனும் அதனால நான் கடைக்குப்போய் எல்லாம் வாங்கிட்டு வரேனு சொல்லி போய்ட்டு வந்தேன். அம்மாவும் ரொம்ப அனுபவிச்சு சமையல் பண்ணாங்க. அம்மா சமையல் ரொம்ப அற்புதமா இருந்தது.

இரண்டு பேரும் சாப்பிட்டு முடித்ததும் அவங்களோட அறையில் ஒன்னா படுத்துக்கிட்டு இருந்தோம். அப்பநான் அம்மா இவ்வளவு நாளா உங்கள பத்தி எனக்கு தெரியாம இருந்தது. ஒரு மகளா அப்பாகிட்ட பகிர்ந்துக்க தயங்கின விஷயங்கள உங்ககிட்ட ஒரு தோழியா பகிர்ந்து கொள்வேன். நீங்களும் என்னை உங்க தோழிதாக நினைச்சு பழகணும். நமக்குள்ள எந்த ஒளிவு மறைவும் இருக்க கூடாதுனு சொன்னேன். அவங்களும் சரினு சொன்னாங்க. சில நேரங்களில் என் தோழி உமாவ பெயர சொல்லியும் கூப்பிடுவேன் என்றேன். அம்மா எனக்கு முழு சம்மதம்டி. நீ .என்ன வாடி போடினு கூப்பிட்டாலும் சந்தோஷம் தான். எனக்கு இருக்க ஒரே தோழியை நான் சாகுர வரைக்கும் இழக்க மாட்டேனு சொன்னாங்க. இன்னைக்கு உமாவா சமையல் பண்ணும்போது வீட்டு வேலைகள் செய்யும் போது எப்படி இருந்துச்சு அம்மானு கேட்டேன். அதுக்கு அவங்க ஒவ்வொரு நொடியையும் அனபவிச்சேன் ஸ்வேதா. என்னை நீ அம்மாகவும் ஏத்துகிட்டது தான் எனக்கு வாழ்நாளில் கிடைச்ச பெரிய பதவினு என்ன கட்டிப் பிடிச்சு முத்தம் தந்தாங்க. நானும் உங்கள அம்மாவாக மட்டுமில்ல நல்ல தோழியாகவும் பழகுவேன்ଞஎன்றேன். அம்மாவும் சரிடி ஸ்வேதானு சொன்னாங்க. அப்ப நான் நீங்க உமாவாக உடையணிந் தனிமையில் படுத்துக் கொண்டிருக்கும் போது எப்படி இருக்கும். உங்க பக்கத்தில் யாராவது ஆண்மகன் இருந்தா அவன் கூட சந்தோஷமா இருப்பியா உமானு கேட்டேன். அதற்கு அம்மா நான் பெண்கள் உடையணியும் போது என்னை ஒரு ஒரு பெண்ணாகதான் பாவித்து ‍இருப்பேன். நான் ஒரு ஆண்தான். சில நேரங்களில் பெண்கள் உடை அணிந்தாலும் எந்த நொடியிலும் ஒரு ஆணுடன் படுக்கையை பகிர்ந்துக் கொள்ளும் எண்ணம் வந்ததில்லை. இன்னும் உண்மைய சொல்லனும்னா நான் ஒரு பெண்ணுடன் என் படுக்கையை பகிர்ந்து உடலுறவு கொண்டு பத்து வருடங்கள் ஆகிறது ஸ்வேதா. எந்த ஒரு உண்மையான CROSS DRESSERம் தன் மனைவியை தவிர மற்ற பெண்களை சகோதரியாகத்தான் நினைப்பான். என்னை பிரிந்தாலும் உன்னை பெற்றவளைத்தவிர வேறு பெண்ணுக்கு என் மனைவு என்ற அந்தஸ்த்தை தரமாட்டேன் என்றார். அப்படி என்றால் உங்கள் ஆசைகளை எப்படி தீர்த்துக் கொள்வீங்க என்று கேட்டேன். அதற்கு அவர் மனமிருந்தால் மார்க்கமுண்டு. தன் மனைவியை உண்மையாக காதலிப்பவன் அவன் இறந் பிறகு மண்ணில் புதைத்தாலும் அவளுக்கு துரோகம் செய்ய மாட்டான். ஒரு உண்மையாந. CROSS DRESSERம் வேறு ஒரு ஆணிடம் உடலுறவு கொள்ள கனவிலும் நினைக்கமாட்டான் என்றார். இப்படி கள்ளமில்லா அன்புடன் ஒரு தந்தை கிடைத்தது என் பூர்வஜென்ம பலன் என்றே சொல்வேன்.
குறிப்பு:- இந்தக் கதை ஒரு CROSS DRESSER வாழ்வின் நடந்த உண்மை நிகழ்வுகளே.

No comments:

Post a Comment